மியன்மாரில் மேலும் 7 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி இராணுவம் திடீரென புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன.

யான்கூன், மண்டேலே உள்ளிட்ட நகரங்களில் தீவிரமாக போராட்டம் நடந்தது. இதில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள் சர்வதேச கவனத்தை ஈர்க்க மியன்மார் மக்களின் ஒற்றுமைக் குரல் உலகை உலுக்கும் என்ற முழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *