மரம் முறிந்து வீழ்ந்தமையால் மலையக மார்க்க ரயில் ​போக்குவரத்து பாதிப்பு

பலன மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று(16) அதிகாலை இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் M.J.இந்திபொலகே தெரிவித்தார். 

இதன் காரணமாக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த 4 ரயில்கள் மற்றும் கொழும்பு மற்றும் பொல்கஹவலையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த 2 ரயில்கள் ஆகியன தாமதமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறிந்து வீழ்ந்துள்ள மரத்தை அகற்றுவதற்காக குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Reported by:S.KumaRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *