இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் ரயில் ஒன்று பேருந்து ஒன்றை மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ரயில் – பேருந்து விபத்தில் மாணவர் ஒருவர் பலியானதுடன் சுமார் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மன்னார் வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குருதிக் கொடையாளர்கள் வழங்கி உதவுமாறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்டான்லி டி மெல், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்