மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.
சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் நேற்று முன்தினம் திருகோணமலையில் சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன்மூலம் அதிகாரப் பரவலாக்கலை அமுல்படுத்த வேண்டும் எனவும் இதன்மூலம் காணிகள் சம்
பந்தப்பட்ட பிரச்னைகளுக்குநாமே தீர்வைப் பெற முடியும் என்பது தொடர்பாகவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்ப துறையை வடக்கு -கிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரையையும் சாணக்கியன் இந்தச் சந்திப்பின் போது
முன்வைத்திருந்தார்.
இதன் மூலம் பல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைவழங்க முடியும்.
அத்துடன் மட்டக்களப்பு,அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் துறைமுகங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.