மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை (15.05.2021) இருபது (20) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று (03) கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் பதினைந்து (15) பேரும் ஆரையம்பதி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இரண்டு பேரும் (02) காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இரண்டு பேரும் செங்கலடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் ஒருவருமாக இருபது தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேரும் காத்தான்குடியில் ஒருவருமாக மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
——————-
Reported by : Sisil.L