மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 60 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.இதற்கமைய ஓட்டமாவடியில் 18 பேரும் வெல்லாவெளியில் 16 பேரும் மட்டக்களப்பு மாநகரில் 11 பேரும் ஏறாவூரில் 07 பேரும் ஆரையம்பதியில் 06 பேரும் கிரானில் 06 பேரும் கோரளைப்பற்று மத்தியில் 05 பேரும் செங்கலடியில் 03 பேரும் வாழைச்சேனையில் 03 பேரும் களுவாஞ்சிக்குடியில் 02 பேரும் காத்தான்குடியில் 02 பேரும் வவுணதீவில் ஒருவருமாக 60 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
————
Reported by : Sisil.L