எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவற்றிடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை பெற்றுக் கொள்ளாததால் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விநியோகஸ்தர்கள் குறைந்த பட்ச எரிபொருள் கையிருப்பில் 50 வீதத்தை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசீலனை செய்து உரிமத்தை இடைநிறுத்துமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Reported by :Maria.S