இரண்டு ஆண்டுகளின் பின் கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிகளில் பங்கேற்கையில் அவற்றுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கையூடாக அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனைகள் பற்றி பாதிரியார்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு தேவாலயங்களின் மதத் தலைவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பெரிய வியாழன்(01) முதல் உயிர்த்த ஞாயிறு(ஏப்ரல் 04) வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reported by : Sisil.L