புத்தாண்டு தினத்தில் விடிவுக்காக தெய்வங்களிடம் பிரார்த்தியுங்கள்: ஆறு திருமுருகன்

புத்தாண்டு பிறக்கிறது. எம்மண்ணில் அமைதியில்லை; நிம்மதியான சூழல் இல்லை. நாம் வணங்கும்  தெய்வங்களிடம் விடிவு கேட்டு அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று
சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தனது புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்
டவை வருமாறு:சைவத்தழிர்களின் வாழ்வில் சித்திரைப் புத்தாண்டு மிகவும்  முக்கியத்துவம் நிறைந்த நாள். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வின் பெறுமதியை உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி, தன் பணிகளைப் புனிதமாகத் தொடரும் நாள் புது வருடம் பிறக்கும் வேளை சகல மக்களும் திருக் கோவில்களுக்குச் சென்று நன்கு வழிபாடு செய்யுங்கள். புதிய எண்ணங்களோடு புத்தாண்டை வரவேற்றுக் கொள்ளுங்கள். தாய், தந்தை, மூத்தோர் பாதம் பணிந்து  அவர்களின் ஆசியோடு அன்பாக வாழ்வதற்கு வழி தேடுங்கள். உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.  இன்றைய சூழலில் நேரில் செல்ல முடியாதவிடத்து தொலைபேசி வாயிலாக அல்லது வாழ்த்துக் கடிதங்கள் மூலமாக இனிய உறவைப் பேணுங்கள். புத்தாண்டு பிறக்கிறது எம்மண்ணில் அமைதியில்லை நிம்மதியான சூழல் இல்லை நாம் வணங்கும்  
தெய்வங்களிடம் விடிவு கேட்டு அனைவரும் பிராத்தனை செய்யுங்கள். எங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறக்க பிரார்த்தியுங்கள். கோபங்களை வளர்த்துப் பயனில்லை. அன்பை பெருக்கி அனைவரும் ஆனந்தமாக வாழ வழிதேடுங்கள். அறம் என்றும் வெல்லும் என்ற சத்திய வாக்குக்கு மதிப்பு கொடுத்து அனைவரும் தர்ம வழியைப் பின்பற்றுங்கள். எல்லாம் வல்ல சிவ பரம்பொருள் அனைவருக்கும் ஆனந்தமான வாழ்வு தர வாழ்த்தி நல்லாசி கூறுகிறேன்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *