பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டமும் ஒரு பாடமாக வேண்டும்: நீதியமைச்சர் அலி சப்ரி

பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டத்தை’ ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு

பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி

ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய இரு அமைச்சுகளும் இணைந்தஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த உப குழு நியமிக்கப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம் பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் பாராளு

மன்ற உறுப்பினர் களான ரவூப் ஹக்கீம்,சிவஞானம் சிறிதரன், வீரசுமண வீரசிங்ஹ, சாகர காரிய வசம், அமரகீரித்தி அத்துக்கோரல, டயனா கமகே, (மேஜர்)

சுதர்ஷன தெனிப்பிட்டிய உள்ளிட்ட எட்டுப்பேரைக் கொண்ட குழுவேஇவ்வாறு நியமிக்கப்பட்டுள் ளது. இதன் செயலாளராக பாராளுமன் றத்தின்

உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக

செயற்படுவார்.இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில்-

சட்டம் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்தி

லேயே காணப்படுவதாகவும், சட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலைநாட்டிலுள்ள மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படைச் சட்டம் தொடர்பில் குடியியல்கல்வி வழங்கப்படுவதாகவும், பாடசாலை பாடத்திட்டத்தில் சட்ட அறிவைஇணைப்பது அவசரத் தேவை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவதுதொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இந்தக் குழு தனது யோசனைகள்

அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதன் பின்னர் நிபுணர்கள் குழுவின்பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தைபாடத்திட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும்

என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *