பதுளை – பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இன்று(20) சனிக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன், 32 பேர் வரையில் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பசறை லுணுகலைப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.சீசி டிவி காட்சிகளின் படி எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டிச் செல்ல முற்பட்ட வேளையிலே பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200அடி பள்ளத்தில் விழுந்து
விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளார். பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.