நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு ,கம்பஹா மற்றும் குருணாகல் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது . மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது நாளாந்தம் அதிகரித்து வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் பல பாகங்களில் தற்போது கொரோனா கொத்தணி பல உரு வாகி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது . ஆகையால் பொது மக்கள் மிகவும் பொறுப்புணர் வுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்