இன்றைய(26) தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி தண்டனைச் சட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பல கைதிகளுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விஷேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளார்.பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1.மே 7ஆம் திகதிக்குள் கைதிகள் ஏற்கனவே ஒரு வருடம் அல்லது தண்டனையின் ஒரு பகுதியை அனுபவித்திருந்தால் ஒரு வருடத்தால் குறைத்தல்
2. மே 7ஆம் திகதிக்குள் அபராதம் செலுத்தாத சிறைக்கைதிகளை விடுவித்தல்
- மே 7ஆம் திகதியின் போது 65 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும் அதேவேளை தனது தண்டனைக் காலத்தின் அரைவாசியை அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்தவரை விடுவித்தல்
- மே 7ஆம் திகதியின் போது 25 வருட ஆயுள் தண்டனையை அனுபவித்தவரை விடுவித்தல், சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிட்டாத 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரை விடுவித்தல்
இவ்வாறு மன்னிப்பளிக்கப்பட்ட கைதிகளை இன்று விடுவிப்பதில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவப் பரிந்துரைகளுக்கு இணங்க விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
———————-
Reported by : Sisil.L