திருநெல்வேலியில் 11 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உட்படவடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாணசுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத் துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்.பல்கலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.14 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்
பட்டுள்ளனர். அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்
படுத்தப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறி
யப்பட்டது. அவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்” என்றும் வடமாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *