வவுனியாவில் தாமரைப் பூ பறிப்பதற்காக நேற்றுக் காலை வைரவ புளியங்குளம் குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்
பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்துக்குள் சென்றுள்ளார்.
குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். பின்னர் ஆசிரியரின் நடமாட்டதைக் காணாமையால் அயலவர்கள் மற்றும் குறித்த குளத்தின் கமக்
கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ஆசிரியர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
Reported by : Sisil.L