முஸ்லிம்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா பேரழிவிலிருந்து உலக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்புக் காலத்தை நிறைவு செய்து, கொண்டாடும் ஈதுல் பித்ர் நன்னாளில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என்று ஜனாதிபதி வாழ்த்தியுள்ளார். சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி,உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகுக்கும் ஒரு சிறந்த முன் உதாரண மாகும்.
புனித அல் குர்ஆனின் போதனைகளைப் பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் இந்தக் கூட்டு அர்ப்பணிப்பையும் திட உறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன்” என்றும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமழான் நோன்புக் காலத்தை நிறைவு செய்து, உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனை
வருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
——————-
Reported by : Sisil.L