இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சுகாதார ஊழியர்கள் நேற்று அரைநாள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி வைத்தியசாலைகளுக்கு முன்னால் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த யாழ். மாவட்ட தாதியர்கள், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Reported by : Sisil.L