சீரற்ற காலநிலையால் 170,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் : நால்வர் பலி ; 7 பேரைக் காணவில்லை

நாட்டில் நிலவும் மோசமான சீரற்ற காலநிலையால் இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு,கம்பஹா, இரத்தினபுரி,  புத்தளம், களுத்துறை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 41,717 குடும்பங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

 மண்சரிவு, வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்கள் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அனர்த்த நிலைமைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவிக்கிறது. 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *