சிரிய ஜனாதிபதி ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆசாத் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிரியா ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆசாத் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.