சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் கடைசித் தொகுதியினர் நேற்று நாடு திரும்பினர்

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொழிலாளர்களின் கடைசித் தொகுதியினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ரியாத் மற்றும் ஜெட்டா தடுப்புக்காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 கைதிகளின் கடைசித் தொகுதியினர் நேற்று சவூதி ஏர்லைன்ஸ் எஸ்வி 786 விமானம் மூலம் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.

 கடந்த ஏப்ரல் 2021இல் இலங்கைத் தூதரகம் ஆரம்பித்த திருப்பி அழைக்கும் பணியின் இறுதிக்கட்டம் இதுவாகும். நேற்று வருகை தந்தவர்களுடன் 131ஆண்களும் 49 பெண்களும் அடங்கலாக 180 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2020 ஜூலை முதல் சவூதி அரேபியாவிலிருந்து  நாடுகடத்தப்பட்ட 334 இலங்கையர்கள்  தாயகம் திரும்பியுள்ளனர்.

 சவூதி அதிகாரிகள் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள துணைத்தூதரகம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பின் அடிப்படையில் முகாம்களில் இருந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *