கொவிட் பெருந்தொற்றினால் இறப்பவர்களின் புதைகுழியாக இரணைதீவை மாற்றுவதற்கான விவேகமற்ற தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என இரணைதீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைதீவு வாழ் பொதுமக்களாகிய நாங்கள் கொவிட்-19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை எமது இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் காரணமாக இந்தத் தீவை சேர்ந்த மக்களாகிய நாம் எமது வாழ்வாதார சாதனங்களையும் கால்நடை வளர்ப்புகளையும் குடியிருப்புகளையும் கைவிட்டுவிட்டு 1987 கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நிலப்பரப்பில்
கோளாறுகள் ஏற்படும்போது இந்த தீவில் கரையொதுங்கி தமது படகுகளைத் திருத்துவார்கள், எரிபொருட்களை நிரப்புவார்கள்,வலைகளை உலர்த்தவும் இளைப்பாறவும் ஒரு துறையாகவும் இரணைதீவு காணப்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத்தீவு கால்நடை வளர்ப்பிற்கும் பயிர்ச்செய்கைக்கும் உகந்தது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்தத் தீவை கொவிட்டினால் இறப்பவர்களின் இடுகாடாக மாற்றினால் அது எமது வாழ்வாதாரத்தை முழுமையாக சீரழித்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இரணைதீவு மக்களான நாம் வடக்கு,கிழக்கு மக்களுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூகத்தின் நல்லடக்க உரிமைகளிற்காகவும் கட்டாய தகனத்தை எதிர்த்தும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ள அவர்கள் எமது நாட்டின் கலா்சாரத்திற்கு ஏற்பவும் உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு ஏற்பவும் இறந்த உடல்களிற்கு உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தாக்கத்தினால் இறக்கும் நபர்களின் உடல்களை இடத்திற்கு இடம் காவிச்செல்வது இறந்தவர்களின் கௌரவத்தையும் அவர்களது குடும்பத்தவர்களின் கௌரவத்தையும் மீறும் செயலாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் பெருந்தொற்றினால் இறப்பவர்களின் புதைகுழியாக இரணைதீவை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் விவேகமற்ற தீர்மானத்தை நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் அத்துடன் முஸ்லிம் மக்களினதும் ஏனைய மக்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்குப் பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
=================
இலங்கை முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இலங்கை முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கல்கமுவவில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு இலங்கையின் மேல்மாகாணத்தைக் கேட்கின்றது இன்னொரு நாடு வடக்கையும் பின்னர் கிழக்கையும் கேட்கின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
6.9 மில்லியன் மக்கள் இதற்காகவா வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வனவள பாதுகாப்பு திட்டங்கள், மாகாணங்கள் ஏன் கொவிட்-19 தடுப்பூசிகள்கூட ஏலத்தில் விடப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.