கொவிட்-19ஆல் முழு நாடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது : திஸ்ஸ அத்தநாயக்க

தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக முழு நாடும் கொவிட்-19க்கு பலியாகி விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்தார்.
சமூகத் தொற்று இல்லை என அரசாங்கம் வலியுறுத்தியதால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே இதற்குக் காரணம் என அவர் கூறினார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அத்தநாயக்க, அரசாங்கம் மூன்றாவது அலையை உடனடியாக எதிர்பார்க்கவில்லை என்பதுடன்   அலட்சியம் மற்றும் அறியாமையே  இதற்குக் காரணமாகும் என்றார். 

தற்போது நாட்டில் கிடைக்கக்கூடிய பி.சி.ஆர். கருவிகள் கையிருப்பில் இல்லாது போனால் அரசாங்கத்தின் தீர்வு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *