கொழும்புத் துறைமுக நகர்(Port city) செயற்றிட்டம் மற்றும் பாது
காப்பு நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக
இந்தியா அறிவித்துள்ளது.புதுடில்லியிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்புத் துறைமுக நகர் தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள இலங்கை அரசு, இது முழுமையாக இலங்கையால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என அறிவித்துள்ளது.அதற்கமைய அங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.வர்த்தக செயற்றிட்டமாக மாத்திரம் காணப்பட்டால் அது இலங்கையின் தெரிவு என இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமது தேசத்தின் அபிலாஷைகளுக்கு அமைய இலங்கையுடன் தொடர்ந்தும் செயற்படுவதாக புதுடில்லியிலுள்ள அதிகாரிகள் ‘த ஹிந்து” பத்திரிகைக்குக் கூறியுள்ளனர்.
கொழும்புத் துறைமுக நகரமானது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத புதுடில்லி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L