கிளிநொச்சியில் 230 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனை

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளிநொச்சி – மலையாளபுரத்தில் 230 படுக்கைகளுடன்
மருத்துவமனை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனை நேற்றிரவு முதல் சேவைக்கு வந்ததாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு
தெரிவித்தது.

இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை கிளிநொச்சி பொது மருத்துவமனையின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது 200 படுக்கைகளுடன்  அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், கிளிநொச்சி வைத்தியசாலை பிரிவினரால் மேலதிகமாக 30 படுக்கைகள் இணைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *