யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கும் வடக்கு மாகாணக்காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கிவரும் மாகாணக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த 8ஆம் திகதி இரவு அனுராதபுரத்துக்கு அவசர அவசரமாக எடுத்துச்
செல்லப்பட்டன.அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் கட்சிகள் உட்படப் பல தரப்பு
களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பலையை அடுத்து எடுத்துச்செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்
துவருவதற்கு உடனடி நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்
தின் கீழ் நியமிக்கப்பட்ட வாழ்வாதாரக்குழுவின் யாழ்., கிளிநொச்சி மாவட்ட
கூட்டத் தொடர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம்
வடக்கு காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட விட
யம் சுட்டிக்காட்டப்பட்டது.இது தொடர்பில் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, காணிச் சீர்திருத்த
ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருடன் அமைச்சர் மஹிந்தானந்த தொலை
பேசியில் பேச்சு நடத்தினார்.இதனை அடுத்தே இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட வடக்குக் காணி ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்குத் தான்
நடவடிக்கை எடுத்துள்ளேன் என அமைச்சர் மஹிந்தானந்த கூறினார்.இது குறித்து அமைச்சர் மஹிந்தானந்தகருத்து வெளியிடுகையில்-
வடக்கு மாகாணக் காணிச் சீர்திருத்தஆணைக்குழுவின்ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை குறித்துஎனக்கு பல தரப்புகளிடம் இருந்தும் முறைப்பாடுகள் கிடைத்தன. இது தொடர்பில் நான் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுடனும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவருடனும் பேச்சு நடத்தினேன்.
இதனையடுத்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும்
மீண்டும் யாழ்ப்பாணம் எடுத்து வருவதற்கும், எதிர்காலத்தில் அந்தச் செயற்
பாட்டை உடனடியாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்
தில் அவ்வாறான செயற்பாடு இடம்பெறாது என்றார்.
Reported by : Sisil.L