கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(09) காலை பிலியந்தலவிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார்.

 நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு அண்மையில் தீர்மானித்திருந்தது.
இலங்கையில்  கொவிட்-19 பாதிப்பால் இதுவரை எட்டு கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளமை தெரிந்ததே. 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *