கர்ப்பிணித் தாய்மாருக்கு எதிர்காலத்தில் தடுப்பூசி வழங்கல் பணி ஆரம்பிக்கப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா கூறினார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன என்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி வழிநடத்தல் குழுவின் அனுமதி இதற்காகப் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கர்ப்பிணித் தாய்மார் அத்தியாவசியத் தேவை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.மேலும் தேவையற்ற கர்ப்பங்கள் குறித்து குடும்ப சுகாதார சேவை அலுவலர் அல்லது சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
——————-
Reported by : Sisil.L