கொஸ்வத்தையில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 3 பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து அப்பெண் தனது கணவனைக் கொன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொஸ்வத்த லுணுவிலவில் இக்குற்றம் இடம்பெற்றதாகவும் 38 வயதுள்ள குறித்த பெண் 44 வயதுள்ள தனது கணவனை படுக்கை விரிப்பை பயன்படுத்திக் கொன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reported by : Sisil.L