கடும் மழையால் எள் செய்கை பாதிப்பு; வலிகாமம் விவசாயிகள் கவலை

வலி. மேற்கு – வலி . தென்மேற்கில் கடந்த நான்கு தினங்களாகப் பெய்த கடும் மழையால் நல்ல விளைச்சலைத் தரக்கூடிய நிலையில் இருந்த எள்ளு பயிர் முழுமையாக சாய்ந்துள்ளன. இதனால், நல்ல அறுவடையை எதிர்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கடும் மழை காரணமாக பெரும் போக நெற்பயிர் பாதித்தது. இந்நிலையில் விவசாயிகள் எள்ளு, உழுந்து, பயறு என சிறுதானிய பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு எள்ளு பயிர் செய்கையில் இம்முறை ஈடுபட்ட வலி. மேற்கு – வலி. தென்மேற்கு விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய நிலை காணப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பெய்த கடும் மழையால் அவை சாய்ந்தன. இதனால், விவசாயிகள் நட்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் நெற்பயிரால் நட்டமடைந்த விவசாயிகள் விவசாயக் காப்புறுதிக்கு விண்ணப்பித்து சில மாதங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் அவர்களுக்கு அந்தப் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மேலும் ஒரு நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த விடயம் குறித்து அரச அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *