ஓமானில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரிடம் இருந்து 4 இலட்சம் ரூபாவை இந்நபர் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதிப்பத்திரமின்றி வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகக் கூறி பணம் திரட்டியுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு வழக்கிற்காக தலா 05 இலட்சம் ரூபா வீதம் 2 சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வௌிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Reported by:S.Kumara