எரிபொருள் விலை உயர்வை உடன் இரத்து செய்யுமாறு ஜே.வி.பி. கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.தொற்று நோய் மற்றும் ஜீவனோபாய இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு மேலும் சுமையாக அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்கான நிதி, பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அது மக்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக அரசு கடந்த ஆண்டு ஒரு நிதியத்தை ஆரம்பித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியத்தை இது போன்ற இக்கட்டான நிலையில், மக்கள் பயனடையக் கூடிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


கொரோனா மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது எனவும், இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு அதனை மேலும் தீவிரப்படுத்தும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டார்.                  
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *