எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன : இராஜாங்க அமைச்சர்

எக்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை வகுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திக்கோவிட்ட முதல் நீர்கொழும்பு வரை விமானப்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை கடற்படையினரும் கரையோர காவல் படையினரும் கடலில் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.கரையோரங்களில் கண்காணிப்பு ரோந்தும் இடம்பெறுகின்றது.

எண்ணெய் கசிவை கட்டுப்படுத்துவதற்காக பூம்ஸ் மற்றும் ஸ்கிம்மர்சை பயன்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
—————————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *