கொழும்பிலிருந்து செயற்படும் ஊடகத்துறையைச் சார்ந்த குறைந்தபட்சம் 36 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை (ஐ.ரி.என்) சேர்ந்த 20 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனைவிட, கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல சிங்களத் தினசரியான மௌபிமவின் பிரதம ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் உட்பட 14 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிரச தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Reported by : Sisil.L