உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியையும் இலங்கை கொள்வனவு செய்யும் : அமைச்சர் ஹெகலிய

உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும் மக்கள் நலன் கருதி இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 தடுப்பூசித் திட்டம் செயற்படுத்தப்படுவதை ஆய்வு  செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை குண்டசாலை வாக்காளர்களைச் சந்தித்த போது அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

 தேசிய தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுவதாகவும் அரசின் தலையீடு இன்றி எந்தவொரு நாடும் தடுப்பூசிகளைப் பெற முடியாது என்றும் மக்களை தவறாக வழிநடத்த கடந்த காலத்தில் தவறான அறிக்கைகளை வெளியிட்ட வடக்கின் சில அரசியல் வாதிகள் தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் இன்றும் அவ்வாறே செய்கின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *