உலகின் மிகச் சுதந்திரமான 10 நாடுகளின் பட்டியலில், கனடாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.210 நாடுகளை உள்ளடக்கிய ஃப்ரீடம் ஹவுஸின் இந்த ஆய்வில், அரசியல் உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளை அணுகுவதன் மூலம் தரம் தீர்மானிக்கப்பட்டது.
இதில் பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 100 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.நியூசிலாந்து 99 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நெதர்லாந்து, உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் 98 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
கனடாவுக்கு குறிப்பாக அரசியல் உரிமைகளுக்காக 40 க்கு 40 மற்றும் சிவில் உரிமைகளுக்காக 60க்கு 58 வழங்கப்பட்டுள்ளது.