இசைஞானி இளையராஜா இன்று தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இசை உலக கடவுளை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
1943ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக அவரது பிறந்தநாளில் தானும் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என ஒரு நாள் முன்னதாக ஜூன் 2ம் திகதி தனது பிறந்தநாளை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்.
தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதிலும் இந்த இசை ஞானியின் இசைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் பல கோடிப் பேர் உள்ளனர். இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட திரைப் பிரபலங்களும் இசை ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள்டா
உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja
உயிர்த் தோழன்
பாரதிராஜா.” என நெகிழ்ச்சியான கவிதையை எழுதி தனது ஆருயிர் நண்பர் இளையராஜாவை வாழ்த்தி உள்ளார்.
16 வயதினிலே படத்தின் மூலம் தொடங்கிய நட்பு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. விரைவிலேயே மீண்டும் இணைந்து இருவரும் படம் பண்ண உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்புகள் வெளியாகின. கொரோனா பரவல் காரணமாக அந்தப் படைப்பு இன்னும் ஆரம்பிக்காமலே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L