நாட்டில் நேற்று அதிக எண்ணிக்கையான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத் தகவல்படி நிட்டம்புவ பகுதியிலிருந்து 171 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.கம்பஹா மாவட்டத்தில் பியகமவிலிருந்து 28, தொம்பேயிலிருந்து 12, கம்பஹாவிலிருந்து 42, கட்டுநாயக்கவிலிருந்து 15, களனியவிலிருந்து 13, கிரிந்திவெலவிலிருந்து 19, மினுவாங்கொட மற்றும் நீர்கொழும்பிலிருந்து 33, சப்புகஸ்கந்தவிலிருந்து 11, வெயாங்கொடவிலிருந்து 32, வத்தளையிலிருந்து 15, வெலிவேரியவிலிருந்து 14 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.இலங்கையில் நேற்று மொத்தமாக 2738 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதுடன் அவர்களில் 23 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாவர்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 339 பேர் பதிவான அதேவேளை அதிகமானோர் அவிசாவளையில்(87) இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை 21 மாவட்டங்களில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை வருமாறு:
கேகாலை-81, பதுளை -73, அம்பாறை-38, மாத்தளை -35, அனுராதபுரம் -68, முல்லைத்தீவு-4, மன்னார்-25, வவுனியா 32, திருகோணமலை-48, நுவரெலியா 198, கண்டி 127, புத்தளம் 52, யாழ்ப்பாணம்-16, கிளிநொச்சி -5, பொலன்நறுவை 30, அம்பாந்தோட்டை-27, மொனராகல-30, மட்டக்களப்பு 79.
———————————–
Reported by : Sisil.L