இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குழந்தைநல மருத்துவரான தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
சிறுவர்களிடையே கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வருவதால் அவர்களை பாதுகாப்பதற்கு தடுப்பூசிகளை வழங்குவது முக்கியமானதாகும்.
பல நாடுகள் சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஆரம்பித்துள்ளன. தற்போது இந்தியா இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
தடுப்பூசிகளை செலுத்தா விட்டால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது.
பெற்றோர் சிறுவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளவதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L