இலங்கைக்கு 65,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கிடைக்கும் : இராஜாங்க அமைச்சர் ஜயசுமண

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொவிட் தடுப்பூசிகள் மேலும் 65,000 அடுத்த வாரம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.இவ்வாறு கிடைக்க உள்ள தடுப்பூசிகள் முதல் டோஸ் செலுத்துகைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் செலுத்துகைக்காக 15,000 தடுப்பூசி
களும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதனை ரஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான கெமீலியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
——————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *