இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்” – எம்.ஏ.சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையைக் கொண்டுவரவுள்ள நாடுகளுடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இந்தியாவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்.

இந்தியாவில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளையும் இந்திய மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயற்படும் என்றே நாம் நம்புகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்

முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்குவைக்க முடியாது” – நாடாளுமன்றில் நீதியமைச்சர் !

முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்குவைக்க முடியாது என நீதியமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு என தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படுள்ளமை தொடர்பாகவும் அவர்களுக்கான நீதி நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றில் அத்துரலிய தேரர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
 இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
 
இலங்கையில் ஒரே சட்டம் என்பதை பின்பற்றவேண்டும் என்றால் ஏனைய மதங்களினால் பின்பற்றப்படும் சட்டங்களையும் நீக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் பல தனிப்பட்ட மத நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் கண்டி திருமண மற்றும் விவகாரத்து சட்டம் யாழ்ப்பாண தேசவழமை சட்டம் ஆகியன காணப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
ஒருமதத்தினது சட்டங்களை மாத்திரம் நீக்கமுடியாது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவற்றில் மாற்றங்களை கொண்டுவரலாம் அல்லது இலங்கையில் காணப்படும் தனியார் சட்டங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *