இரணை தீவுப் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
360க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இரணைதீவுப் பகுதியில் மக்களின் அனுமதியோ பொது அமைப்புகளின் ஆலோசனைகளோ இன்றி கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளமை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், மதம் சார்ந்து அல்லாமல் ஒவ்வொருவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இரணைதீவுப் பகுதியில் இவ்வாறு செயற்பாடுகளை மேற்கொள்வதை தாங்கள் எதிர்ப்பதாகவும், எனவே அரசாங்கம் இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளைத் தெரிவு செய்து அவ்வாறான பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும் எனவும் இரணைதீவு பங்குதந்தை ம.பத்திநாதர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கற்கடதீவுப் பகுதியிலும் குழி
கள் தோண்டப்பட்ட நிலையில் அவற்றில் நீர் நிறைந்த காரணத்தினால் அப்
பகுதி குழிகளுடன் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ள
தாகவும் தெரிவிக்கப்பட்டது.