கொரோனா தாக்கம் காரணமாக ஒக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு 80 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை சவூதி அரேபியா அனுப்பவுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதையடுத்து, உள்நாட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான இடங்களுக்கு விரைந்து கொண்டுபோய் சேர்க்க மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
அதேவேளையில் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவும் வகையில் ஒக்சிஜனை வழங்கி வருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபியா 80 மெட்ரிக் தொன் திரவ ஒக்சிஜனை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது. அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சவுதி அரேபியா இந்தியாவுக்கு ஒக்சிஜனை ஏற்றுமதி செய்யவுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L