இந்தியாவில் நடைபெறவுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் உள்ளிட்ட 20 அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அங்கோலியா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் உஸ்பெஸ்கிஸ்தான் மொங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ”ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் விஜயம் மேற்கொள்ளப்படவுள்ள தினம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாட்டிற்கு வருகை தந்தால் இரு நாடுகளுக்கிடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Reported :Maria.S