அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் 20ஆந் திகதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத்து வருகிறார்.பொருளாதாரம், நிதி மற்றும் மருந்து போன்ற முக்கியத் துறைகளில் அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமனம் செய்துள்ளார்அண்மையில் நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகன் முக்கிய பங்காற்றினார்.இந்த நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிபர் ஜோபைடன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நாசா விஞ்ஞானிகளுடன் காணொலி மூலம் நடந்த உரையாடலில் ஜோ பைடன் பேசியதாவது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் (சுவாதி மோகன்), என்னுடைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் என்னுடைய பேச்சை எழுதித் தரும் வினய் ரெட்டி ஆகியோர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றார்.ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் 55 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது