அபாய கட்டத்தில் நாடு ; தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பின

இலங்கையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை கிட்டத்தட்ட 1,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.நாட்டில் கொவிட்-19 வைரஸின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.  அத்துடன் புதிய பிறழ்வு வைரஸால் இளம் வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் இள வயதினர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும் கொவிட் 19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.
எனினும் தொற்று நோய் ஆபத்தைத் தணித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *