சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடரந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று மீள திறக்கப்படுகின்றன.
மேலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முன்னைய சுற்றறிக்கைக்கு அமைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேவேளை மேல் மாகாணத்திலும் முன்பள்ளிகள் மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reported by : Sisil.L