நாட்டின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளின் மத்திய நிலையமான கொழும்பு துறைமுகத்துக்கு பாரிய பொறுப்பு உண்டு.இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜய பாகு கொள்கலன் பகுதிக்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று அங்கு சென்ற அமைச்சர் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். COVID -19 வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
1942அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக துறைமுக நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மணித்தியாலமும் துறைமுகப் பணிகளை முன்னெடுத்து சேவைகள் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு பக்கபலமாக இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோரை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.
கொழும்பு துறைமுக வளவில் அனைத்து சேவைகளுடனான வசதிகளும் தொடர்ச்சியாக உரிய வகையில் இடம்பெற்று வருகின்றன்றன. பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி பெற்றுக்கொடுக்கும் பிரதான தரப்பினர் என்ற ரீதியில் துறைமுகத்தில் சீனி, உரம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் கப்பல் நடவடிக்கைகள், ஏனைய கொள்கலன் செயற்பாடுகள் உரிய வகையில் இடம்பெறுகின்றனநாட்டின் விவசாய தொழிற்துறை வீழ்ச்சி ஏற்படாத வகையில் அத்துறையை முன்னெடுப்பதற்காக சமீபத்தில் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட 21 கப்பல்களிலிருந்தும் உரத்தை துரிதமாக விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதி பொருட்களுக்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி நாட்டில் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..