விமான நிலையங்களை மூட எந்தத் தீர்மானமும் இல்லை:அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

புதிய கொரோனா தொற்று வகைகள் கண்டறியப்பட்ட போதிலும், இலங்கையின் விமான நிலையங்களை மூட
அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு
செயல்முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
புதிய கொரோனா தொற்று வகைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட போதிலும், அனைத்துச் சவால்களையும்
எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பான மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

 Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *