வவுனியாவில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள தோட்டக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்றை ஓமந்தைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். நேற்று மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள தனியார் தோட்டக் காணியை அதன் உரிமையா ளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது குறித்த காணியில் கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஒமந்தைப் பொலிஸாருக்குத் தெரியபடுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு வெடிபொருட்கள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நீதிமன்றின் அனுமதியுடன் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *