புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனைச்சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது.வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்துகொண்டார்.புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஒரே இடத்தில் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் குறித்த விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு,விற்பனை செய்யப்படுகின்றன.நிகழ்வில் அதிதிகளாக வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் துஷ்யந்திமாலா மற்றும் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள், சமுர்த்திப் பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Reported by : Sisil.L